நள்ளிரவு என்பது நிறைவு அல்ல ஓர் இடைநிலை. கடந்த நாளின் சுவடுகளும், வரவிருக்கும் நாளின் எதிர்பார்ப்புகளும் ஒன்றாகச் சந்திக்கும் ஓர் இடம். சில நினைவுகள் முடிவடையாமல் புதைந்திருக்கும், சில உணர்வுகள் இன்னும் சொல்லப்படாமல் நிற்கும்.
இரவில் எதுவும் இயக்கத்தில் இல்லை. நகரங்கள் ஓய்ந்துவிடும், சப்தங்கள் மந்தமாகிவிடும். ஆனால் மனதில் மட்டும் ஓர் அலையின் ஒலியைப் போல் எண்ணங்கள் அடிக்கடி வந்து செல்லும். சில நேரங்களில், அது ஓர் குற்ற உணர்வாக இருக்கலாம், சில சமயம், ஓர் இழப்பாகவும்.
விடியலின் வெளிச்சம் வந்தபின் இந்த நினைவுகள் புறப்படும். ஆனால் சில, நிழலாகி நம்முடன் தொடரும். நள்ளிரவு எழுப்பிய கேள்விகளுக்கு விடியல் பதிலளிக்குமா?
So very poetic✨
ReplyDeleteThank you so much♥️
DeleteRead Oliver Goldsmith's " City Night Peace", an essay from the sociological perspective.
ReplyDeleteதன்னிலை அறிய உதவும் ஒரு அற்புதப் படைப்பு.
Thank You so much for your suggestion! Will check out for sure♥️
Delete